/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசை கண்டித்து கம்யூ., பிரசார இயக்கம்
/
மத்திய அரசை கண்டித்து கம்யூ., பிரசார இயக்கம்
ADDED : பிப் 22, 2025 04:48 AM

புதுச்சேரி,: மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., மா.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.
புதுச்சேரி சுதேசி மில் அருகே நடந்த பிரசார இயக்கத்திற்கு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், சி.பி.எம்., மாநில செயலாளர் ராமச்சந்திரன், கம்யூ., எம்.எல்., மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மா.கம்யூ., துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரி மாநில அரசின்அனைத்து கடன்களையும், மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதி குழுவில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, வலியுறுத்தி பேசினர். மத்திய பா.ஜ., அரசின், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

