நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
பழைய பஸ் நிலையம் காய்கறி மார்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முரளி, புதுச்சேரி.
சிக்னல் தேவை
முருங்கப்பாக்கம் சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் சிக்னல் அமைக்க வேண்டும்.
ராணி, அரியாங்குப்பம்.
சுகாதார சீர்கேடு
மிஷன் வீதியில் சாலையில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சின்னையா, மிஷன் வீதி.
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் அருகில் பல மாதங்களாக ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரவு நேரத்தில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
மணிமாறன், தவளக்குப்பம்.

