நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்குகள் எரியாமல், அப்பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.
ராணி,தவளக்குப்பம்.
நாய்கள் தொல்லை
உப்பளம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
மணி,உப்பளம்.
நைனார்மண்டபம், தென்னஞ்சாலை ரோட்டில் அதிகளவில் நாய்கள் சுற்றுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
குமார்,நைனார்மண்டபம்.
சுகாதார சீர்கேடு
அரியாங்குப்பம், சுப்பையா நகர், சாலையில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
கிருஷ்ணா,அரியாங்குப்பம்.
மிஷன் வீதியில் சாலையில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சின்னையா,மிஷன் வீதி.

