நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி ஜெயராம் நகர் மெயின் ரோட்டில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
வேல்அரவிந்தன், தட்டாஞ்சாவடி.
கழிவு நீர் தேக்கம்
அரும்பார்த்தபுரம் நடுத்தெரு மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
குமார், அரும்பார்த்தபுரம்.
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.
ரமேஷ், கொம்பாக்கம்.
வேகத்தடையில் வெள்ளை கோடு தேவை
மங்கலத்தில் இருந்து ஏம்பலம் சாலையில்,அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வர்ணம் பூசாமல் இருப்பதால், வாகன விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஜெயக்குமார், தனத்துமேடு.

