நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனங்களால் விபத்து
இந்திரா சிக்னலில் இருந்து முருகா தியேட்டர் செல்லும் சாலையில், எதிர்புறமாக ஒருவழிப்பாதையில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
மனோகரன்,புதுச்சேரி.
தரமற்ற உணவு
கோரிமேட்டில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதால், உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது.
தட்சிணாமூர்த்தி,புதுச்சேரி.
பஸ் நிலையத்தில் குடிநீர் தேவை
கோடை வெயில் அதிகரித்து வருவதால் புதிய பஸ் நிலையத்தில் இலவச சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், புதுச்சேரி.
சாலை ஓர வாகனங்களால் விபத்து
மறைமலையடிகள் சாலையில் ஆம்னி பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் தாறுமாறாக நிறுத்துவதால் தினசரி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
விமல்ராஜ், கோரிமேடு.

