நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் எரியுமா?
வில்லியனுார் மெயின் ரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் அப்பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.
கணபதி, வில்லியனுார்.
கழிவுநீர் தேக்கம்
வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் கிழக்கு பகுதியில் வாய்க்கால் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இந்துமதி, வில்லியனுார்.
விபத்து அபாயம்
மரப்பாலத்தில் இருந்து நைனார்மண்டபம் வரை தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரமணியன், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் நாய்கள் அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவி, தட்டாஞ்சாவடி.