பொதுமக்கள் அவதி
புதுச்சேரி வைசியாள் வீதியில் மின்சாரம் ஒயர் பதிக்க பள்ளம் தோண்டி வேலை நடக்காமல் உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுமதி, ராஜ்பவன்.
நீண்ட காலமாக நிற்கும் கார்
ராஜ்பன் தொகுதி கேப்டன் மரியூஸ் சேவியர் வீதியில் பழைய கார் ரோட்டில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்குஇடையூராக உள்ளது.
சக்திவேல், ராஜ்பவன்.
திடீர் கடைகளால் இடையூறு
வில்லியனுார பெரிய கோவில் எதிரே முளைத்துள்ள கடைகளால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
குப்பை தொட்டி சேதம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவுவாயிலில் உள்ள உழவர்கரை நகராட்சி சொந்தமாக குப்பை தொட்டி பயன்படுத்த முடியாத அளவிற்கு உடைந்து கிடக்கின்றது.
சிவஅசோக்ராஜ், பிள்ளைச்சாவடி.
நிழற்குடை தேவை
புதுச்சேரி முருகா தியேட்டர் கோரிமேடு சாலைசந்திப்பில் அருகே நிழற்குடை இல்லாததால்பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புவனேஸ்வரி, புதுச்சேரி.
நாய் தொல்லையால் அச்சம்
கரசூர் பகுதியில் தெருவில் நாய்கள் அதிகமாகசுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்து சென்றுவருகின்றனர்.
திருமால், கரசூர்.
நாய்களுக்கு தடை விதிக்க வேண்டும்
கடற்கரை சாலையில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்வதற்கு நகராட்சியினர் தடை விதிக்கவேண்டும்.
மீனா, புதுச்சேரி.
சாலையில் ஆக்கிரமிப்பு
மறைமலையடிகள் சாலையில் ஆக்கிரமிப்புகள்அதிகமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
ரவி, புதுச்சேரி.
பணியை துரிதப்படுத்த வேண்டும்
நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
மதி, நெல்லித்தோப்பு.

