
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேக்கம்
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் சர்வீஸ் சாலை,நடுத்தெரு சந்திப்பில் வாய்க்கால் அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
குமார், அரும்பார்த்தபுரம்.
நிழற்குடை தேவை
ஏர்போர்ட் சாலையில் பாக்கமுடையான்பட்டு,ஜீவா காலனியில் பயணிகள் நிழற்குடைஅமைக்க வேண்டும்.
ஆசியாகுமார், பாக்கமுடையான்பட்டு.
நாய்கள் தொல்லை
உழவர்கரை ஜவகர் நகரில் நாய்கள் தொல்லைஅதிகமாக உள்ளது.
ராகவன், உழவர்கரை.
புதர் மண்டியுள்ளது
கரசூர் சுடுகாட்டில் செடி கொடிகள் வளர்ந்துபுதர் மண்டி கிடக்கிறது.
திருமால், கரசூர்.
சுத்தமான குடிநீர் தேவை
முத்தியால்பேட்டை முழுதும் குடிநீர் மிகவும்கலங்கலாக வருகிறது.
கலிவரதன், முத்தியால்பேட்டை.