டிராபிக் ஜாம்
வழுதாவூர் சாலை மேட்டுப்பாளையம் சந்திப்பில் சாலை ஓரம் உள்ள கடைகளால் டிராபிக் ஜாம்ஏற்படுகிறது.
முத்துக்குமரன், மேட்டுப்பாளையம்.
அடிப்படை வசதிகள் தேவை
வில்லியனுார் கொம்யூன் அரியூர் கிராம சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீர் செய்து, மின் விளக்குமற்றும் சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டும்.
தீபக்குமார், அரியூர்.
சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் புறவழிச்சாலை ஓரமாக அரசு மற்றும் கோவில் இடங்களை புளுமெட்டல் மற்றும்டிராவல்ஸ் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன.
அன்பு, வில்லியனுார்.
பஸ்களால் விபத்து
அரும்பார்த்தபுரம் பஸ் நிறுத்தில் பஸ்கள்நடுரோட்டில் நிறுத்துவதால், மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் வாகனங்கள் பஸ்கள் மீது மோதி விபத்தில் சிக்குகிறது.
கலைச்செல்வி, புதுச்சேரி.
------------------------------------------------------------மாடுகளால் இடையூறு
உறுவையாறு செல்வா நகர் 4வது குறுக்கு தெருவில் சாலையில் மாடுகள் கட்டியிருப்பதால்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
ராஜி. உறுவையாறு.
சுகாதார சீர்கேடு
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வடக்கு சர்வீஸ் சாலையில் குப்பைகளை கொட்டி வருவதால்,சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
குமார், அரும்பார்த்தபுரம்.
குப்பைகள் தேக்கம்
இந்திரா நகர் தொகுதி, காந்தி நகர் 3வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல்இருப்பதால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
சரஸ்வதி, புதுச்சேரி.