நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் கம்பத்தால் ஆபத்து?
நோணாங்குப்பம் நியூ காலனி 2வது குறுக்கு தெருவில், ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
மாணிக்கம், நோணாங்குப்பம்.
இருண்டு கிடக்கும் ராஜிவ் சிக்னல்
ராஜிவ் சிக்னலில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இரவில் இப்பகுதி இருண்டு கிடக்கிறது.
சம்பத், புதுச்சேரி.
ைஹமாஸ் விளக்கு தேவை
புதுச்சேரி ஜீவா காலனி ஏர்போர்ட் சாலை வளைவில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.
தெரு விளக்கு எரியுமா?
முருங்கப்பாக்கம், ரங்கசாமி நகரில் தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், இரவில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
ராம்குமார், முருங்கப்பாக்கம்.
சுகாதார சீர்கேடு
நைனார்மண்டபம், சுதானா நகர, பாவணர் வீதியில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ராதா, நைனார்மண்டபம்.