நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பில் இருந்து கே.பி.எஸ்., மண்டபம் வரை மின் விளக்குகள் நேற்று இரவு எரியாமல் சாலை முழுதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கணேசன், இ.சி.ஆர்.சாலை, புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை
வில்லியனுார், செந்தமிழ் நகர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆரோக்கியராஜ், வில்லியனுார்.
கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு
நெட்டப்பாக்கம் மேட்டுத்தெரு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில்தேங்கி நிற்கிறது.
சிவபெருமாள், நெட்டப்பாக்கம்.
நாய்கள் தொல்லை
உருளையன்பேட்டை, குபேர் நகர், 5வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
அன்பழகன், உருளையன்பேட்டை.

