சாலையில் மெகா பள்ளம்
மங்கலத்தில் இருந்து ஏம்பலம் செல்லும் சாலையில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி நிற்கிறது.
குமரன், புதுச்சேரி.
நாய், குரங்குகள் தொல்லை
அரியாங்குப்பம் இந்திரா நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
இருசப்பன், அரியாங்குப்பம்.
மூலக்குளம் அன்னை தெரசா நகர் 3வது குறுக்கு தெருவில், நாய்கள் மற்றும் குரங்குள் தொல்லை அதிகமாக இருப்பதால், நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமா, மூலக்குளம்.
கழிவுநீர் தேக்கம்
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதி ஓடைப்பகுதியில் வாய்க்காலில் மண் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
தினேஷ், ஜீவானந்தபுரம்.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பகுளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் விபத்து நடந்து வருகிறது.
மதி, தவளக்குப்பம்.