
தெரு விளக்கு எரியுமா?
உழவர்கரை பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில் தெரு விளக்குகள் எரியவில்லை.
நவரசன், உழவர்கரை.
வேகத்தடை தேவை
அபிேஷகப்பாக்கம், மடுகரை மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
விஜயபாரதி, அபிேஷகப்பாக்கம்.
துர்நாற்றம் வீசுகிறது
பிள்ளைத்தோட்டம், கெங்கையம்மன் கோவில் தெருவில் வாய்க்கல் மண்ணை அகற்றி சாலையில் கொட்டி வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
சந்திரா, பிள்ளைத்தோட்டம்.
தெரு நாய்கள் தொல்லை
தலைமை செயலகம், பிரஞ்சு துணை துாதரகம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் முதியவர்கள் நடைபயிற்சி செய்ய அஞ்சுகின்றனர்.
கோபால், புதுச்சேரி.
விபத்து அபாயம்
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஜவகர் நகர் முதல் மூலக்குளம் வரையிலான சாலையில் பல அடி நீளத்திற்கு சாய்தளம் அமைத்துள்ளதால் விபத்து ஏற்படுகிறது.
முத்துக்குமரன், புதுச்சேரி.
விளையாட்டு உபகரணம் சேதம்
சட்டசபை எதிரில் உள்ள பாரதி பூங்காவில், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதால், சிறுவர்கள் அதில் விளையாடும்போது காயமடைகின்றனர்.
பானுமதி, புதுச்சேரி.
போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் ஸ்டேட் பாங்க் எதிரில் சாலையின் இரு பக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி.

