
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி, புவன்கரே வீதி ரயில்வே கேட் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
நாராயணசாமி, முதலியார்பேட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
காரமணிக்குப்பம், முருகன் கோவில் எதிரில் தோண்டிய பள்ளம் சரிவர மூடாமல் கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
முத்துக்குமரன், புதுச்சேரி.
சாலையில் பள்ளம்
புதுச்சேரி, நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வினோத், முதலியார்பேட்டை.
ரிப்லெக்டர் பொருத்தப்படுமா?
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை சென்டர் மீடியன்களில் ரிப்லெக்டர்கள் பொருத்த வேண்டும்.
பாலமுருகன், புதுச்சேரி.
வேக கட்டுப்பாடு கருவி தேவை
புதுச்சேரி நகர மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கழற்றி இயக்கப்படுகிறது.
செந்தில், புதுச்சேரி.

