சிமென்ட் சிலாப் சேதம்
குருமாம்பேட்டையில் இருந்து முருகா தியேட்டர் வரை, கழிவுநீர் செல்லும் வாய்க்கால் மேலே உள்ள சிமென்ட் சிலாப் தேமடைந்துள்ளது
கந்தசாமி, குருமாம்பேட்.
கொசு தொல்லை
வில்லியனுார் பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் கொசுக்கள் அதிகமாக இருப்பதால், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
தெரு விளக்கு எரியவில்லை
உழவர்கரை பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
காந்தி, உழவர்கரை.
ஆக்கிரமிப்பால் இடையூறு
நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சிவராமன், புதுச்சேரி.
கழிவுநீர் தேக்கம்
முத்தியால்பேட்டை, குரு சித்தானந்தா வீதி வாய்க்காலில், குப்பைகள் அடைத்து, கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது.
ரவி, முத்தியால்பேட்டை.
குண்டும் குழியுமான சாலை
மடுகரையில் இருந்து கடலுார் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாலகுரு, புதுச்சேரி.
------------------------------------------------------ஆக்கிரமிப்பு
நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.
-----------------------------------------------------------நாய்கள் தொல்லை
மிஷன் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
மதி, புதுச்சேரி.
-------------------------------------------நிழற்குடை தேவை
அரியாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நிற்கின்றனர்.
ரவி, அரியாங்குப்பம்.

