
குண்டும் குழியுமான சாலை
மடுகரையில் இருந்து கடலுார் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாலகுரு, புதுச்சேரி.
------------------------------------------------------ஆக்கிரமிப்பு
நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.
-----------------------------------------------------------நாய்கள் தொல்லை
மிஷன் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
மதி, புதுச்சேரி.
-------------------------------------------நிழற்குடை தேவை
அரியாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நிற்கின்றனர்.
ரவி, அரியாங்குப்பம்.
புதர் மண்டி கிடக்கும் காலி மனை
கதிர்காமம் கதிர்வேல் நகர், காலிமனையில் புதர் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பாலசுப்ரமணியன், கதிர்காமம்.
சிமென்ட் சிலாப் சேதம்
உருளையன்பேட்டை ராஜிவ்காந்தி நகர், எம்.ஜி.ஆர்., வீதியில் வாய்க்கால் சிமென்ட் சிலாப் உடைந்து சேதமடைந்து இருப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
பாபு, உருளையன்பேட்டை.
தெரு விளக்கு எரியவில்லை
வில்லியனுார், வி.மணவெளி செந்தாமரை நகரில் தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
மணி, வில்லியனுார்.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
ராஜிவ் சிக்னலில் பல நாட்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
சேகர், புதுச்சேரி.
சுகாதார சீர்கேடு
தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், சுடுகாடு போகும் வழியில் குப்பைகள் கொட்டி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மணி, தட்டாஞ்சாவடி.