நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான சாலை
காலாப்பட்டு தொகுதி வாசன் நகர், 4வது குறுக்கு தெருவில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருநாவுக்கரசு, புதுச்சேரி.
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரவி, தவளக்குப்பம்.
பஸ் நிலையத்தில் புழுதி
புதிய பஸ் நிலையத்தில் மண் புழுதி ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மீனாட்சி, புதுச்சேரி.
போக்குவரத்து நெரிசல்
பழைய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதி, புதுச்சேரி.