
விபத்து அபாயம்
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில்,மூலக்குளம் தக்ககுட்டையில் இருந்துஅரும்பார்த்தபுரம் வரை சென்டர் மீடியன்அமைக்காததால் தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது.
வருண்குமார், புதுச்சேரி.
சுகாதார சீர்கேடு
தேங்காய்த்திட்டு, நேரு நகர் வழியாக துறைமுகம் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் டன் கணக்கில் குப்பையுடன் கழிவுகள் தேங்கி நிற்பதால்சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பச்சையப்பன், தேங்காய்த்திட்டு.
சாலை ஆக்கிரமிப்பு
வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
தினகரன், வேல்ராம்பட்டு.
குண்டும் குழியுமான சாலை
முதலியார்பேட்டை ஏ.எப்.டி.,மில் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று கிடக்கிறது.
சீனுவாசன், முதலியார்பேட்டை.
சாலையில் மணல் குவியல்
ஏ.எப்.டி., மில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தின் எதிரில் கோர்ட் வாசல் பகுதியில் சாலையில் படர்ந்துள்ள மணல் குவியலால் தினசரி வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
மாறன், புதுச்சேரி.