தாழ்வாக செல்லும் மின் கம்பி
காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள விவசாய நிலத்தில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கர், காட்டேரிக்குப்பம்.
ஏரிக்கரை சாலை சேதம்
கூனிச்சம்பட்டு புதிய ஏரிக்கரை சாலை சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குமார், கூனிச்சம்பட்டு.
ைஹமாஸ் விளக்கு எரியவில்லை
திருக்கனுார் - கே.ஆர்.பாளையம் சாலை சந்திப்பில் உள்ள ைஹமாஸ் விளக்கு கடந்த சில தினங்களாக ஏரியவில்லை.
விக்ரம், கே.ஆர்.பாளையம்.
-------------------------------------------------சுகாதார சீர்கேடு
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில், குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சிவக்குமார், காட்டுக்குப்பம்
-----------------------------------------------------------தெருவிளக்கு தேவை
கந்தன்பேட் சி.எம்.ஏ., நகர் சப்தகிரி நகர் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பழனி, கந்தன்பேட்.
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா
கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியில், கழிவு நீர் வாய்க்கால் வசதி இல்லாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரிச்சந்திரன், கிருமாம்பாக்கம்.
அங்கன்வாடி கட்டடம் சேதம்
பிள்ளையார்குப்பம், அருகே அங்கன்வாடி மைய கட்டடம் பாழடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
சரவணன், பிள்ளையார்குப்பம்.
குடிநீர் குழாய் இணைப்பு தேவை
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாததால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சேகர், கிருமாம்பாக்கம்.