ADDED : ஜூன் 05, 2026 08:01 PM
வாய்க்காலில் குப்பை அடைப்பு
ராஜிவ் சதுக்கம் முதல் கருவடிக்குப்பம் வரை இ.சி.ஆரில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது.
மாறன், கருவடிக்குப்பம்.
குப்பைகள் தேக்கம்
தேங்காய்த்திட்டு மேட்டுத் தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
கதிரவன், தேங்காத்திட்டு.
குண்டும் குழியுமான சாலை
வெங்கட்டா நகர், 3வது குறுத்தெருவில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சங்கர், வெங்கட்டா நகர்.
அடிக்கடி மின் தடை
தட்டாஞ்சாவடி தொகுதி, கொட்டுப்பாளையம், லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
விக்னேஷ், புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சரவணன், முதலியார்பேட்டை.
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மோகன்ராஜ், புதுச்சேரி.
