ADDED : ஜூன் 22, 2026 06:42 PM
தெரு விளக்கு எரியவில்லை:
புதுச்சேரி சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
பாலாஜி, சாரம்.
–––––––––––––––––––––––––––––––––––––
பைபாஸ் சாலையில் மண் குவியல்: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மண் குவியல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுரேஷ், அரும்பார்த்தபுரம்.
–––––––––––––––––––––––––––––––––––––––––––
தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
காந்தி, முதலியார்பேட்டை.
–––––––––––––––––––––––––––––––––––––
நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை:
அண்ணாசாலை – வள்ளலார் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி சீரமைக்க வேண்டும்.
கல்யாணம், ராஜ்பவன்.
–––––––––––––––––––––––––––––––––––––
மெகா பள்ளம்: நோணாங்குப்பம் சுண்ணாம்மாறு பாலம் முடியும் பகுதியில் மெகா பள்ளம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பாரதி, புதுச்சேரி.
––––––––––––––––––––––––––––––––––––––
சாலையில் மீன் கடைகள்: உப்பளம் சாலையோரத்தில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சரவணன், உப்பளம்.
––––––––––––––––––––––––––––––––––––
குண்டும்: மூலக்குளம்– மேட்டுப்பாளையம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராகவன், மூலக்குளம்.
:
