UPDATED : ஜூலை 08, 2026 11:33 PM
ADDED : ஜூலை 08, 2026 07:04 PM

மரக்கிளைகள் விழுவதால் விபத்து: வில்லியனுார் சாலை பகுதியில் உள்ள மரக்கிளைகள் காய்ந்து கீழே விழுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
சாலையில் கழிவுநீர்: முத்தியால்பேட்டை குட்டி கிராமணி தெருவில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
சம்பந்தம், முத்தியால்பேட்டை.
தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் தெரு நாய்கள் சாலையில் நிற்பதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
விஜயக்குமார், புதுச்சேரி
போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராஜேந்திரன், அரியாங்குப்பம்.
சாலையில் ஆக்கிரமிப்பு: திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை
சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கலியபெருமாள், மூலக்குளம்.
