மரத்திலிருந்து பாம்பு விழுந்ததால் மீன் விற்றவர்கள் ஓட்டம்
மரத்திலிருந்து பாம்பு விழுந்ததால் மீன் விற்றவர்கள் ஓட்டம்
UPDATED : ஜூலை 08, 2026 11:31 PM
ADDED : ஜூலை 08, 2026 07:04 PM
புதுச்சேரி: உப்பளம் சாலையில் மரத்தில் இருந்து பாம்பு, மீன் வியாபாரம் செய்தவர்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
முதலியார்பேட்டை உப்பளம் சாலையோரத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தினந்தோறும் மீன் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த மரத்தில் இருந்து 5 அடி நீளமுள்ள பச்சை பாம்பு மீன் வியாபாரம் செய்த பெண்கள் தலை மீது விழுந்தது. பதறிபோன மீன் விற்ற பெண்கள் மற்றும் மீன் வாங்கியவர்கள் அங்கிருந்து அலறிஅடித்துக்கொண்டு ஓடினர்.
விழுந்த பாம்பு அருகில் இருந்த மின்சார பெட்டிக்குள் புகுந்தது. மின் ஊழியர்கள் பெட்டியில் புகுந்த பாம்பை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் மீன் விற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
