ADDED : ஜூலை 23, 2026 05:02 PM
கடிகாரம் ஓடுமா?
முத்தியால்பேட்டை, மணிக்கூண்டு கடிகாரம் கடந்த ஆறு மாதமாக ஓடவில்லை.
காந்தி, முத்தியால்பேட்டை.
கழிவுநீர் தேக்கம்
இந்திரா நகர் தொகுதி, கோவிந்தபேட்டைக்கும், சாணரப்பேட்டைக்கும் நடுவில் உள்ள பெரிய வாய்க்காலில், புதர் மண்டி குப்பைகள் அடைத்து, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
சூர்யா, புதுச்சேரி.
வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், கோர்க்காடு, புதுக்கடை சந்திப்பு மேம்பாலம் கீழ் வைக்கப்படும் கடைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
ரங்கசாமி, உறுவையாறு.
குடிநீர் வருமா?
தவளக்குப்பம், வி.ஐ.பி., நகர், மாரிமுத்து தெருவில் குடிதண்ணீர் சரியாக வருவதில்லை.
வேதமணி, தவளக்குப்பம்.
விபத்து அபாயம்
புதுச்சேரி ராஜிவ் சதுக்கத்தில், போக்குவரத்து சிக்னல் விழும் முன்பே, வழுதாவூர் சாலையில் இருந்து வாகன ஓட்டிகள் விதிமீறி வருவதால், விபத்து அபயாம் ஏற்பட்டுள்ளது.
நாராயணசாமி, புதுச்சேரி.
