/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்க்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு புகார்; கவர்னர் அதிரடி ஆய்வு
/
கோர்க்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு புகார்; கவர்னர் அதிரடி ஆய்வு
கோர்க்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு புகார்; கவர்னர் அதிரடி ஆய்வு
கோர்க்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு புகார்; கவர்னர் அதிரடி ஆய்வு
ADDED : செப் 02, 2024 01:19 AM

நெட்டப்பாக்கம்: ஆக்கிரமிப்பு புகாரை தொடர்ந்து, கோர்க்காடு ஏரியினை கவர்னர் கைலாஷ்நாதன், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஊசுடு, பாகூர் அடுத்த கோர்க்காடு ஏரி மூன்றாவது மிகப்பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் உள்ளது.
இந்த ஏரியை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கவர்னர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 10.15 மணியளவில், கவர்னர் கைலாஷ்நாதன் கோர்க்காடு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில், ஏரியின் கொள்ளளவு மற்றும் ஏரி பகுதியில் இருந்து பயன்பெறக்கூடிய கிராமங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த வரைபடம் மூலம் கவர்னரிடம் விளக்கினர். பின் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி இவற்றிக்கு நிரந்தர தீர்வுகான உத்தரவிட்டார். மேலும் அவர் ஏரியின் உள்பகுதியில் உள்ள பட்டா பகுதிகளை அரசு கையகப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்கி அந்த நிலங்களை கையகப்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும் என்று லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கவர்னரிடம் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தொடர்ந்து கண்காணிக்கவும், ஏரியின் மதகுகளை சரி செய்ய உத்தரவிட்டார்.
பின்னர் ஏரிக்கரை பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்கள் எங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்குமாறும், ஏரியில் கள் விற்பனை தடுக்க வலியுறுத்தியும் கவர்னரிடம் முறையிட்டனர்.
இதனை கேட்ட கவர்னர் உடன் எஸ்.பி., யை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், எஸ்.பி.,க்கள் வம்சிதர ரெட்டி, மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.