ADDED : மே 01, 2024 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சட்டசபையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி சட்டசபையில் இளநிலை எழுத்தர் அய்யனாரப்பன், பல்நோக்கு பணியாளர் அய்யனார் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர்.
அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா சட்டசபை செயலக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சட்டசபை செயலர் தயாளன் தலைமை தாங்கி, பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிகளை பாராட்டி பேசி, நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், விவாதப்பதிவாளர் அலமேலு, கண்காணிப்பாளர்கள் முருகன், சுகுமாறன் மற்றும் சட்டசபை ஊழியர்கள் பங்கேற்றனர்.