ADDED : மே 13, 2024 05:06 AM

புதுச்சேரி: கம்பன் கலையரங்கில் நடந்த, 57ம் ஆண்டு கம்பன் நிறைவு விழாவில், பட்டிமன்றத்தின் மேல்முறையீடு தீர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில், 57ம் ஆண்டு, கம்பன் விழா, மூன்று நாட்கள் நடந்தது.
நேற்று நிறைவு விழா நிகழ்ச்சியில், காலை 9:00 மணிக்கு விழைந்ததும், விளைந்ததும் என்ற தலைப்பில் சிந்தனை அரங்க நிகழ்ச்சியில், ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆளவந்தார் முன்னிலை வகித்தார்.
அதனை தொடர்ந்து, 11:30 மணிக்கு தனியுரை நிகழ்ச்சியில், இழைக்கின்ற விதி முன் செல்ல என்ற நிகழ்ச்சியும், அதனை அடுத்து, இன்னொரு கம்பன் வருவானோ நிகழ்ச்சி நடந்தது.
பட்டி மன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நேற்று மேல்முறையீடு நடந்தது.
இசைக் கலைவாணன் முன்னிலை வகித்தார்.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன் நடுவராக செயல்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு செயலர் முத்தம்மா, பேராசிரியர் ஞானசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.