சமுதாய நலவழி மையத்திற்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் வழங்கல்
சமுதாய நலவழி மையத்திற்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் வழங்கல்
ADDED : ஏப் 28, 2026 09:02 PM
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு சுப்ரமணிய பாரதி கல்வி அறக்கட்டளை சார்பில், கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டது.
மண்ணாடிப்பட்டு கிராமத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சமுதாய நலவழி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, படுக்கை வசதிகளுடன் கூடிய ரத்த பரிசோதனை கூடம், கண், பல் சிகிச்சை கூடம், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ளன.
இதனால், மண்ணாடிப்பட்டு மற்றும் அதனை சுற்றிலுள்ள புதுச்சேரி, தமிழகப் பகுதியை சேர்ந்த நோயாளிகள் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சமுதாய நலவழி மையத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பதிவு செய்ய போதிய கம்ப்யூட்டர் வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து, திருக்கனுார் சுப்ரமணிய பாரதி கல்வி அறக்கட்டளை சார்பில், மண்ணடிபட்டு சமுதாய நலவழி மையத்தில் பொதுமக்கள் நலன்கருதி மருத்துவ காப்பீடு திட்டத்தில் விரைந்து பதிவு செய்யும் வகையில், இரண்டு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டது.
அதனை அறக்கட்டளை சேர்மன் சம்பத், துணை சேர்மன் சுசிலா சம்பத் ஆகியோர் தலைமை மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியனிடம் வழங்கினர்.
