/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆரம்ப பள்ளிக்கு கணினி உபகரணங்கள்
/
அரசு ஆரம்ப பள்ளிக்கு கணினி உபகரணங்கள்
ADDED : ஆக 19, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த பெருங்களூர் அரசு ஆரம்ப பள்ளியில் கணினி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் ஜான் சேவியர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிகரம் பவுண்டேஷன் நிறுவனர் சுப்ரமணி, 1992ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கணினி, கலர் பிரிண்டர்களை பள்ளிக்கு வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சங்கீதா, பரணிதீபா, ராஜலட்சுமி, மார்கரெட் ரோசி, ஜெயா, சரண்யா, ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

