/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்களில் கல்லா கட்டும் கண்டக்டர்கள்
/
பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்களில் கல்லா கட்டும் கண்டக்டர்கள்
பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்களில் கல்லா கட்டும் கண்டக்டர்கள்
பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்களில் கல்லா கட்டும் கண்டக்டர்கள்
ADDED : ஜூலை 07, 2024 03:44 AM
பி.ஆர்.டி.சி., சார்பில், 80க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்களில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்வது கிடையாது.
தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பது இல்லை. இதனால், ஏழை எளிய மக்கள் கட்டணம் குறைவாக வசூலிக்கும் பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்களில் செல்ல விரும்புகின்றனர்.
ஆனால், பி.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் எடுக்க 10 ரூபாய் கொடுத்தால், பல நேரங்களில் மீதி தொகையான 3 ரூபாயை திருப்பி கொடுப்பது கிடையாது. குறிப்பாக, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, கோரிமேடு செல்லும் பஸ்களில் இந்த மோசடி நடக்கிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுப்பது கிடையாது. பல நேரங்களில் டிக்கெட் கொடுத்தாலும் மீதி தொகை 3 ரூபாயை தருவது கிடையாது.
ஒரு நாளைக்கு பி.ஆர்.டி.சி., பஸ் 20 முறை கோரிமேட்டிற்கு சென்று வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு ரூ.2000 அளவிற்கு கல்லா கட்டுவதாக பயணிகள் புலம்புகின்றனர்.
கண்டக்டரிடம் பயணிகள் பாக்கி தொகையை கேட்டால், 'சில்லரையுடன் ஏறுங்கள்... இல்லை யென்றால் கீழே இறங்குங்க...' என, கறார் காட்டுகின்றனர்.
இதுபோன்று செயல்படும் கண்டக்டர்கள் மீது, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பயணிகளின் நலனை காக்க வேண்டும்.