/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதல்
/
10 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதல்
ADDED : ஏப் 04, 2024 12:36 AM
3 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் இரு தரப்பினரிடையே 10 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சாரணப்பேட், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (எ) சிவமூர்த்தி, 37; பெரிய மார்க்கெட் லோடுமேன். நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே டீ குடித்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த சண்முகாபுரம், அண்ணா வீதியைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் ஜான்பீட்டர், 32. தனது நண்பர் கணேைஷ 10 வருடத்திற்கு முன், ஏன் அடித்தாய் என கேட்டு தகராறு செய்தார். ஜான் பீட்டருடன் இருந்த பாரதிதாசனும் சேர்ந்து வீரப்பனை தாக்கினர்.இரு தரப்பும் மாறி மாறி தாக்கி கொண்டது. அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மூவரையும் விலக்கி விட்டனர்.
காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த ஜான்பீட்டர், பாரதிதாசன், வீரப்பன் ஆகியோர் மீது மிரட்டல், தாக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

