ADDED : அக் 10, 2026 02:37 AM
புதுச்சேரி: இடைத்தேர்தல் வெற்றியால் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை மீண்டும் 12ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தலில், என்.ஆர்.காங்., 16 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின், முதல்வர் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், சட்டசபையில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களின் 11 ஆக குறைந்தது.
இந்நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மீண்டும் 12-ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபையில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., 12 எம்.எல்.ஏ.,க்களுடன் முதன்மை இடத்தில் உள்ளது. இதர கட்சிகளில், தி.மு.க., 5 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., 4 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ளன ர்.
மேலும், த.வெ.க., 2 எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., ல.ஜ.க., காங்., நேயம் மக்கள் கழகம் கட்சிகள் தலா 1 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தவிர, 3 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.
