/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கண்காணிப்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
/
மருத்துவ கண்காணிப்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
ADDED : ஆக 30, 2024 05:56 AM

புதுச்சேரி: ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஐயப்பன் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாப்ளி ஜேம்ஸ் மருத்துவ ஆலோசகராக பணி மாற்றப்பட்டதை யொட்டி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் அய்யப்பன், ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சந்திப்பின் போது புதுச்சேரி ரெமிடி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விநாயகம் உடனிருந்தார்.

