தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ‘இண்டி’ கூட்டணி தோல்விக்கு காங்., – தி.மு.க., தான் காரணம் மா.கம்யூ., குற்றச்சாட்டு

புதுச்சேரி ‘இண்டி’ கூட்டணி தோல்விக்கு காங்., – தி.மு.க., தான் காரணம் மா.கம்யூ., குற்றச்சாட்டு

புதுச்சேரி ‘இண்டி’ கூட்டணி தோல்விக்கு காங்., – தி.மு.க., தான் காரணம் மா.கம்யூ., குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 03, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்., – தி.மு,க., இணக்கமாக செயல்படாததால், இண்டி கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியவில்லை என, மா.கம்யூ., தெரிவித்துள்ளது.

இது குறித்து மா.கம்யூ., அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது.

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்று இரண்டு மாதங்கள் ஆகியும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சட்டசபையும் கூட்டப்படவில்லை. அரசு நிர்வாகம் செயல்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

திரிசங்கு சொர்க்கத்தில் இந்த அரசு உள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க வேண்டிய அரசு, அவர்களுக்குள் உள்ள பிரச்னையை தீர்க்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறது.

கடந்த 1ம் தேதி முதல் நுாறு நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. மீதமுள்ள நாட்களுக்கு ஒதுக்க மாநில அரசிடம் நிதி இல்லை.

பல மாநில முதல்வர்கள் நிதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என, கடிதம் எழுதியுள்ளனர். போலி மருந்து ஊழலில் உயர் அதிகாரிகள் உட்பட  26 கைதாகி விடுதலையாகின்றனர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வரும் போது அதுகுறித்து முடிவு செய்வோம். தமிழகத்தில், அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 

புதுச்சேரியில் இண்டி கூட்டணி இணைந்து செயல்படவில்லை.  காங்., – தி.மு,க., இணக்கமாக செயல்படாததால், புதுச்ரேியில் இண்டி கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில், மா.கம்யூ., விஜய் ஆட்சிக்கு ஆதரவே தவிர, அவர்களின் கூட்டணியில் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us