ADDED : ஜூலை 03, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரியில், போக்சோ வழக்கில், நான்கு மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேல்புவனகிரி அருந்தியர் தெருவை சேர்ந்தவர் குணசீலன், 30; இவரது, மனைவி ஜீவா என்கிற ராஜலெட்சுமி, 17; இருவரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதனால், மனமுடைந்த ராஜலெட்சுமி கடந்த ஏப்., மாதம், 6ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து, புவனகிரி போலீசார், மைனர் பெண்ணை திருமணம் செய்தததால், குணசீலன் மீது போக்சோ வழக்குப் பதிந்து, தேடிவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த நான்கு மாதமாக தலைமறைவாக இருந்த குணசீலனை,30; நேற்று போலீசார் கைது செய்தனர்.
