தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்டா நண்பரிடம் செயின் பறிப்பு 

இன்ஸ்டா நண்பரிடம் செயின் பறிப்பு 

இன்ஸ்டா நண்பரிடம் செயின் பறிப்பு 


ADDED : ஜூலை 03, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: இன்ஸ்டாவில் நண்பராக பழகிய நபரிடம் மொபைல் போன் மற்றும் செயினை பறித்த நபர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை, பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன், 35; இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வந்த இவருடன், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழங்கி வந்தனர்.

கடந்த 1ம் தேதி ஜான்சனை தொடர்பு கொண்ட ஆதி, மது அருந்த வானுார் அடுத்த பூத்துறைக்கு வரும் படி அழைத்துள்ளார்.

அதனை ஏற்று ஜான்சன் அங்கு சென்றுள்ளார். அப்போது, ஆதியுடன், சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஆதி, ஜான்சனின் மொபைல் போனை பறித்துக்கொண்டார். மற்ற அடையாளம் தெரியாத நபர்கள், ஜான்சன் அணிந்திருந்த அரை சவரன் செயினை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்து ஜான்சன் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆதி உட்பட சிலரைத் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us