/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., வலியுறுத்தல்
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை, அரசு திரும்ப பெற வேண்டும் என காங்., துணைத் தலைவர் அனந்தராமன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் இரு மாதங்களுக்கு முன், மின்சார கட்டண உயர்வை அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தின் அடிப்படையில், தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மக்களை வஞ்சிக்கின்ற செயல். புதுச்சேரி மாநிலத்தில், 'வரியில்லா பட்ஜெட் போடுவோம்' என்று சொல்லி, ஆட்சிக்கு வந்த பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி அரசு, இப்பொழுது மின் கட்டணம் மட்டுமல்லாது எல்லா வரிகளையும் உயர்த்துவது கண்டனத்துக்குரியது. அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
தாமதமாக கட்டக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு கந்து வட்டியை விட அதிகமான அபராதம் விதிக்கப்படுவதை மின் கட்டண பில்லில் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் அரசு, மின் கட்டணம் ஏற்றப்படாது என்று கூறி இரண்டு மாதம் கழித்து மின் கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளது.
மத்திய அரசும், புதுச்சேரி அரசும், தலைமைச் செயலகத்தில், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவதற்கு கூட்டம் நடந்துள்ளது.
மக்களை ஏமாற்றுகின்ற இப்படிப்பட்ட அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.