காங்., புதிய மேலிட பொறுப்பாளர் நாளை புதுச்சேரி வருகை
காங்., புதிய மேலிட பொறுப்பாளர் நாளை புதுச்சேரி வருகை
ADDED : ஜூலை 22, 2026 09:03 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குலாம் அமது மீர் நாளை(24ம் தேதி) புதுச்சேரி வருகிறார்.
இதுகுறித்து மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்திற்கான காங்., கட்சியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக அகில இந்திய காங்., கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர் நாளை (24ம் தேதி) மாலை புதுச்சேரிக்கு வருகை தருகிறார். பின், மறுநாள் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு, காங்., தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து, புதிய பொறுப்பாளரை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களைக் கூற விரும்பும் நிர்வாகிகள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்று மாலை வரையில் சந்தித்து கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் பின், அவர் சென்னை திரும்புகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
