/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க.,வுக்கு 'ஓகே' காங்., கட்சிக்கு 'நோ'
/
அ.தி.மு.க.,வுக்கு 'ஓகே' காங்., கட்சிக்கு 'நோ'
ADDED : மார் 31, 2024 03:45 AM
புதுச்சேரி, : உப்பளம் தொகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளர் பிரசாரத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அனுமதி தர மறுத்ததால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, நேற்று மாலை 4:00 மணியளவில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி பெறப்பட்டு இருந்தது.
அதேநேரத்தில், இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் சார் பில், உப்பளம் தொகுதியில் மாலை 4:00 மணியளவில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
உப்பளம் தொகுதியில் இரண்டு வேட்பாளர்களும், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே காங்., வேட்பாளர் பிரசாரத்திற்கு அனுமதி தர கூடாது என்று போலீசார் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, காங்., வேட் பாளர் வேறு ஒரு தேதியில் உப்பளம் தொகுதியில் பிரசாரம் செய்து கொள்ளலாம் என தெரிவித்த மாவட்ட தேர்தல் அதிகாரி, இண்டியா கூட்டணி வேட்பாளர் பிரசாரத் திற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.
அதையடுத்து உப்பளம் தொகுதியில் காங்., வேட்பாளர் பிரசாரம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

