/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா ஆசாமி தாக்குதலில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பினார்

ADDED : மார் 05, 2025 04:39 AM

புதுச்சேரி: கஞ்சா குற்றவாளிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கான்ஸ்டபிள் வசந்த் சிகிச்சை முடிந்து பணியில் சேர்ந்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஆக., 8ம் தேதி, வில்லியனுார் அருகே கஞ்சா குற்றவாளிகளை பிடிக்க சென்ற கான்ஸ்டபிள் வசந்த், கொடூரமாக தாக்கப்பட்டு படுக்காயத்துடன் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சட்டசபை கூட்ட தொடரின்போது, கான்ஸ்டபிள் வசந்த் மீது நடந்த தாக்குதல் குறித்து எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.
கான்ஸ்டபிள் வசந்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்திற்கு, போலீஸ் துறை சார்பில் எந்தவித நிதி உதவியும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வசந்துடன் பணியாற்றிய சக போலீசார் இணைந்து 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து மருத்துவ சிகிச்சைக்காக அளித்தனர்.
கஞ்சா குற்றவாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு பல இடங்களில் எலும்பு முறிவு, தலையில் எலும்பு சிதைவு ஏற்பட்ட நிலையில் போலீஸ் மற்றும் அரசு சார்பில் ஆறுதல் கூற கூட யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கஞ்சா ஆசாமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை முடிந்த கான்ஸ்டபிள் வசந்த் கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். தலை எலும்பு முறிந்துள்ளதால் போலீஸ் தொப்பி அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வசந்த் போலீஸ் சீருடைகள் விற்பனை செய்யும் செல்பி கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.