/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாலாறு தடுப்பு அணை கரையில் கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை
/
நுாலாறு தடுப்பு அணை கரையில் கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை
நுாலாறு தடுப்பு அணை கரையில் கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை
நுாலாறு தடுப்பு அணை கரையில் கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை
ADDED : மே 28, 2024 03:43 AM

காரைக்கால், : காரைக்கால் திருநள்ளாறு நுாலாற்றில் தடுப்பு அணை கரை உடைப்பு எற்பட்டதை தினமலர் நாளிதழில் செய்தி எதிரொலியாக பொதுபணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விரைவில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட குமாரக்குடியில் நுாலாற்றின் குறுக்கே சிறிய தடுப்பு அணை பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்டது . இந்த நுாலாற்று பாசனம் மூலம் சேத்துார், குமாரக்குடி, இளையான்குடி,தென்னங்குடி,செல்லுார் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் 1250 ஏக்கரில் விவசாயிகள் பாசனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்த கோடை மழையில் இந்த சிறிய தடுப்பணையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் குமாரக்குடி நுாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனணயின் இடது கரையில் 10 மீட்டர் அளவுக்கு கரையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற் பொறியாளர் மகேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின் தண்ணீரை சேமிக்க பொதுப்பணித்துறை மூலம் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து 15நாட்களில் கரைநிரந்தரமாக சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.