ADDED : மார் 22, 2024 10:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நைனார்மண்டபம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.
நைனார்மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் முத்துரங்கம் தலைமை தாங்கினார். சந்திரகுமார் வரவேற்றார். செயலாளர் கிருஷ்ணகுமார், சூரியகுமார் முன்னிலை வகித்தனர்.
திலகவதி, கிருஷ்ணமூர்த்தி, சுவர்ணலதா, நாகரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

