/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்கட்டண ரசீதை கண்டு நுகர்வோர்கள் 'ஷாக்'
/
மின்கட்டண ரசீதை கண்டு நுகர்வோர்கள் 'ஷாக்'
ADDED : செப் 18, 2024 04:49 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண தொகைக்கான ரசீதை கண்டு நுகர்வோர்கள் 'ஷாக்' அடித்தார் போன்று அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி புதுச்சேரி அரசு, இந்த ஆண்டிற்கான மின் கட்டணத்தை கடந்த 3ம் தேதி மாற்றி அமைத்துள்ளது.
இந்த மின்கட்டண உயர்விற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு பதில் அளிக்கும் மின்துறை அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் மின்கட்டணம் குறைவு என விளக்கம் அளித்து வருகின்றனர்.
அதனை உண்மை எனக் கருதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்த நிலையில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திற்கான முதல் மாதத்திற்கான ரசீது நேற்று நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டது.
அதில் குறிப்பிட்ட தொகையை கண்ட நுகர்வோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். காரணம், தமிழகத்தைவிட புதுச்சேரியில் மின்கட்டணம் குறைவு எனக்கூறும் நிலையில் புதுச்சேரியில் 272 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1,132 என வந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் 278 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.602 என வந்துள்ளது.
இரு கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்த புதுச்சேரி நுகர்வோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால்,
புதுச்சேரியில் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்துடன், நிரந்தர சேவைக்கட்டணம் மற்றும் கூடுதல் வரி என சேர்த்து வசூலிக்கப்படுகிறது.