/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரிக்கலாம்பாக்கத்தில் தொடர் மின்வெட்டு
/
கரிக்கலாம்பாக்கத்தில் தொடர் மின்வெட்டு
ADDED : செப் 18, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் பகுதியில் தொடர் மின் தடை ஏற்படுவதால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் பகுதி யில், கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.
அதனால், காலை நேரங்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தங்களது பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பகல் நேரங்களில் கடைகள், ஓட்டல் கடைகள் தனியார் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். முதியவர்கள், நோயாளிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
மின் தடையை சரி செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

