/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் உரையில் முரண்பாடுஇ.கம்யூ., கட்சி கருத்து
/
கவர்னர் உரையில் முரண்பாடுஇ.கம்யூ., கட்சி கருத்து
ADDED : மார் 11, 2025 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் உரையாற்றிய கவர்னரின் பட்ஜெட் உரையில் முரண்பாடு உள்ளதாக இ.கம்யூ., கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அக்கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை;
தேர்தல் வாக்குறுதியாக 10 ஆயிரம் அரசு பணியிடம் நிரப்பப்படும் என கூறி, 2444 பணியிடம் மட்டுமே நிரப்பி உள்ளனர்.
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. வேலையில்லா திட்டத்தில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. தனிநபர் வருமானம் ஆண்டிற்கு 3,02,680 ஆக உயர்ந்திருக்கிறது எனும் தகவல் தவறானவை.
கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது.
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கான நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறுகின்றன என முதல்வர் கூறியுள்ளார். ஆனால், சேதராப்பட்டு கரசூர் பகுதியில், புதிய தொழில் பண்ணை உருவாக்கப்படும் என கவர்னர் முரண்பாடாக பேசியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.