/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து வெளியேறும் போலீசார்
/
வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து வெளியேறும் போலீசார்
ADDED : ஏப் 13, 2024 04:25 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் காரணமாக வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து போலீசார் வெளியேறி வருகின்றனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி, போலீசார் நடுநிலையுடன், எந்த கட்சியும் சாராமல் பணியாற்ற வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டார். மேலும், சமூக வலைத்தள வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடுநிலையான போலீஸ் அதிகாரிகள் பலர் சாதி, கட்சிகள் சார்பில் இயங்கும் வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து வெளியேறினர்.
ஆனால், சில போலீஸ் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் வாட்ஸ்ஆப் குழுக்கள், சாதி அடிப்படையில் இயங்கும் வாட்ஸ் ஆப் குழுக்களில் உறுப்பினர்களாக நீடித்து வருகின்றனர். இதுபோன்ற குழுக்களின் செயல்பாடுகளை தேர்தல் துறை கண்காணித்து வருகிறது. விதிமீறல்கள், அவதுாறு தொடர்பான தகவல்கள் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது.

