/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊழல் செய்த இண்டியா கூட்டணி கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்: நட்டா பேச்சு
/
ஊழல் செய்த இண்டியா கூட்டணி கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்: நட்டா பேச்சு
ஊழல் செய்த இண்டியா கூட்டணி கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்: நட்டா பேச்சு
ஊழல் செய்த இண்டியா கூட்டணி கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்: நட்டா பேச்சு
ADDED : ஏப் 16, 2024 07:25 AM

புதுச்சேரி, : லோக்சபா தேர்தலில் ஊழல் செய்த இண்டியா கூட்டணி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார்.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா நேற்று புதுச்சேரி அண்ணா சதுக்கம் முதல் அஜந்தா சிக்னல் வரை திறந்த வேனில் (ரோடு ேஷா) சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை முற்றிலும் மாற்றியமைத்தவர் பிரதமர் மோடி. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கடந்த 60 ஆண்டுகளாக காங்., கட்சி கட்டிமைத்திருந்த அரசியலை பிரதமர் மோடி மாற்றி அமைத்துள்ளார்.
காங்., கட்சி நாட்டை பிளவுப்படுத்தி, ஓட்டு வங்கி அரசியலை நடத்தி, ஊழலில் திளைத்தனர். ஆனால் பிரதமர் மோடி வந்த பிறகு, வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார். ஜாதி, வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது.
பெண்களுக்கான திட்டங்களை தீட்டி, அவர்களை வலுப்படுத்தியுள்ளோம். மகளிருக்காக 13 கோடி கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளோம். பெண்களுக்கான 10 கோடி காஸ் சிலிண்டர்களை வழங்கியுள்ளோம். ஜன்தன் திட்டத்தின் கீழ் 50 சதவீத வங்கி கணக்குகளை ஏற்படுத்தியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழைகள் பயன்பெற ஒவ்வொருவரும் மருத்துவ செலவிற்கு ரூ.5 லட்சம் கொடுத்து வருகிறோம்.
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எதிர்பக்கம் இருக்கின்ற இண்டியா கூட்டணியில் ஊழல் செய்த கட்சிகள் அனைத்துமே ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
நமது அரசாங்கம் ஊழலை ஒழிக்க பாடுபடுகின்றது. ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவது மோடியின் லட்சியம். எனவே ஊழல் கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணிகளை லோக்சபா தேர்தலில் புறக்கணித்து நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக நாட்டு மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்து தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

