ADDED : டிச 07, 2024 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் ஈரம் பவுண்டேஷன் சார்பில் மகளிர்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சியை நிறுவனர் ஈரம் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
ஈரம் பவுண்டேஷன் சார்பில், மகளிர் திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான இலவச அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்கான துவக்க விழாவிற்கு, ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, அழகுக்கலை பயிற்சியை துவக்கி வைத்தார்.
காங்., பிரமுகர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணராஜ், வட்டாரத் தலைவர் ஆனந்தபாபு, மாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம், முத்தியால்பேட்டை தொகுதி துணைத் தலைவர் சுரேஷ், காங்., நிர்வாகிகள் மணி, அரவிந்த், அருண், ராஜா, ராஜேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.