/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணிக்கை: புதுச்சேரி தொகுதிக்கு 3 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியும்
/
ஓட்டு எண்ணிக்கை: புதுச்சேரி தொகுதிக்கு 3 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியும்
ஓட்டு எண்ணிக்கை: புதுச்சேரி தொகுதிக்கு 3 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியும்
ஓட்டு எண்ணிக்கை: புதுச்சேரி தொகுதிக்கு 3 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியும்
UPDATED : மே 30, 2024 06:43 AM
ADDED : மே 30, 2024 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு மூன்று சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரிய வரும்.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு கடந்த ஏப்., 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தேர்தல் துறை முழு வீச்சில் செய்து வருகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி மோதிலால் நேரு பாலிடெக்னிக் ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. காரைக்காலில் அண்ணா கலை அறிவியல் கல்லுாரியிலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏனாம் எஸ்.ஆர்.கே.,கலை அறிவியல் கல்லுாரியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிந்து விட்டது.
ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறியதாவது:
ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னேற்பாடுகள் முடிந்துள்ளது. மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் ஓட்டுகள் 3 சுற்றுகளாக எண்ணப்படும்.
முதல் சுற்றில் புதுச்சேரியல் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ்நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 தொகுதி ஓட்டுகள் எண்ணப்படும்.
2ம் சுற்றில் திருபுவனை, வில்லியனுார், இந்திரா நகர், ராஜ்பவன், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, மணவெளி, நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படும். 3ம் சுற்றில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, உப்பளம், முதலியார்பேட்டை, பாகூர், நிரவி ஆகிய 8 தொகுதிகளின் ஓட்டுக்கள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு முகவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். ஓட்டு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்றிலும் 105 டேபிள் போடப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும். காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.
முகவர்கள் காலை 7:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும். காலை 6:30 மணிக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து முகவர்கள் முன்னிலையில் வெளியே கொண்டுவரப்படும். ஓட்டு எண்ணிக்கை விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையிலும் ஓட்டு எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்படும். பிற்பகலில் முன்னணி விபரங்கள் தெரியவரும். ஓட்டு எண்ணிக்கை முறையாக நிறைவுபெற இரவு 7:00 மணியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகவர்களுக்கு அறிவுறுத்தல்
முன்னதாக கலெக்டர் குலோத்துங்கன், சப்கலெக்டர் வினயராஜ், ஓட்டு எண்ணிக்கை மைய பொறுப்பு அதிகாரி சுதாகர் ஆகியோர் முகவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.