ADDED : மார் 07, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விநாயகம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி இயற்கை கழகம் சார்பில், துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி யும், துணிப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து இயற்கை கழகம் சார்பில் மாண வர்கள், பெற்றோர்கள், பொது மக்களுக்கு இலவசமாக துணிப்பை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியை கள் வானதி, விசாலாட்சி, ஜெயஸ்ரீ மாலதி, கிருத்திகா, தமிழ்தென்றல் செய்திருந்தனர்.